எந்தன் நெஞ்சம் கனமாக
வாழ்க்கை ஒழுக்கம் தடுமாற
போதை சுகமும் மனம் தேட
பேனா பேப்பர் எடுத்து விட்டேன்.
சுமைகள் சற்றே வெளியேற
மையைக் கரைக்க முடிவெடுத்தேன்.
எண்ணக் குப்பைகள் தன்மீதேற
அமைதியாய் பொறுத்தது காகிதமும்
காகிதம் போலக் கடமையினை
வருத்தமின்றி செய்திடவே
கரும யோகம் வாய்க்காதோ?
பக்தியும் கைகூடாதோ?