இது எழுதி புரிய வைக்கக்கூடியதில்லை. இணையதள சர்ச்சையினால் எழுத உந்தப்படுகிறது.
அத்வைதத்தை பாமரனும் கடைபிடிக்க முடியுமா என்று கேட்டால், பிரசாந்தி நிலையமே அதன் பதில். அனைத்திலும் ஒன்றைப் பார்ப்பது, ஒன்றில் அனைத்தையும் பார்ப்பது, இவை பஜனைகள் மூலமாக வலியுறுத்தப்படுகிறது.
பாபாவின் அனைத்து நிறுவனங்களிலும் அனைவரும் பயனாளிகள். ஆஸ்ரமத்து பூஜைகளில், பெரும்பாலும் உள்ளூர் முஸ்லிம்கள் பங்கேற்பதில்லை. ஆனால், குறைந்த விலைக்கு பொருட்களை வாங்குவதற்கோ மற்ற சலுகைகள் பெறுவதற்கோ அவர்கள் விலக்கப்படுவதில்லை.
பாபாவின் மருத்துவமனை பயனாளிகள் நிறைய பேர் முகமதியர்கள். (மருத்துவமனைக்கு இந்த பிரிவினர் தான் வர வேண்டும், ஏழைகள் தான் வரவேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை.)
பாபா 'miracle man' என்ற குற்றச்சாட்டு உண்டு. நம்பாதவர்கள் யாரையும், பாபாவின் பக்தர்கள் துளியும் மாற்ற முயற்சிப்பதில்லை. உண்மையில் பக்தர்கள் பாபாவை விற்கமுயற்சிப்பது வெகுவாக discourage செய்யப்படுகிறது.
பாபாவின் பணிகள் நம்மை வியப்பில் அழ்த்துகிறது. கட்டணமில்லா பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தண்ணீர் தன்னிறைவு திட்டங்கள் என்று எவ்வளவோ.
இதில் ஆச்சர்யம் என்ன என்றால், பாபா சமாதி அடைந்து 13, 14 வருடங்கள் ஆன நிலையிலும், அவற்றின் தரம் சற்றும் குறையாமல் நடத்தப்படுகிறது. ஒரு குரு தரமான சிஷ்யர்களை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட தரமான மக்களால் தான் அனைத்து நிறுவனங்களும் இன்றளவும் நடத்தப்படுகிறது.
மருத்துவமனைகளிலும், ஆஸ்ரமத்திலும் பணிபுரியும் தன்னார்வதொண்டர்கள் ஏராளம். 50% மேல் தன்னைர்வதொண்டர்களே. ஊழியர்கள் 50%. இன்றளவும் இது உண்மை. ஸ்வாமியின் சமாதிக்கு பிறகும் இது சாத்தியமாகின்றது என்றால் பெருமை விளங்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் அன்று சமாதியில் காரோல்ஸ் பாடுவது சகஜம். அதே போல் வெள்ளைக்கார மக்கள் சாய்ராம் சொல்லிக்கொண்டு பிள்ளையாருக்கு வடல் போடுவதும் சகஜம்.
அனைத்து மதத்தினரையும் ஒன்றாகப் பார்ப்பதால் நம்முடைய ஹிந்துத்துவத்திற்கு எந்த பங்கமும் வருவதில்லை. சொல்லப்போனால் அருமையான ஹிந்துவாக மாற முடிகிறது. பாபாவின் தொடர்பினால் ஹிந்துக்கள் 'practising Hindus' ஆக மாறுகிறார்கள் என்பது உண்மை.
சனாதன தர்மத்திற்காக போராடும் சாய் தீபக், ஸ்வாமியின் பக்தர்.
மழுங்கிய ஹிந்துக்கள் அல்ல பட்டை தீட்டப்பட்ட ஹிந்துக்கவே அத்வைதம் நம்மை மாற்றுகிறது. அத்வைதத்தை பாமரனுக்கும் ஊட்டியது சாய் அவதாரம்.
சாய்ராம்!!!
No comments:
Post a Comment