Saturday, 19 August 2023

எழுத்து

 எந்தன் நெஞ்சம் கனமாக

வாழ்க்கை ஒழுக்கம் தடுமாற

போதை சுகமும் மனம் தேட

பேனா பேப்பர் எடுத்து விட்டேன்.

சுமைகள் சற்றே வெளியேற

மையைக் கரைக்க முடிவெடுத்தேன்.

எண்ணக் குப்பைகள் தன்மீதேற

அமைதியாய் பொறுத்தது காகிதமும்

காகிதம் போலக் கடமையினை

வருத்தமின்றி செய்திடவே

கரும யோகம் வாய்க்காதோ?

பக்தியும் கைகூடாதோ?


வெற்று வார்த்தை

 மாயம் மாயம் மாயம் மாயம்  உலகம் மாயமே  விழித்துக்கொண்டால் விழித்துக்கொண்டால் எனக்கு லாபமே  திருவடியை பற்றி கொண்டால் துன்பம் எனக்கில்லை  ஆனால...