பொதுவாக நான் சொந்தக்கதை எழுத மாட்டேன். ஆனால் இன்று என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுகிறேன்.
ஒரு காலை பொழுதில் என் மகனை சங்கீத பயிற்சி செய்யுமாறு சொல்லிக்கொண்டிருந்தேன். அவனும் முன்பே பயிற்சி எடுத்திருந்த வர்ணம் ஒன்றை பாடினான். நான் திருப்தி அடைந்து அவனை பாராட்ட முற்படுகையில் வீட்டு வேலை பார்க்கும் அம்மாள் அங்கு வந்து 'பாட்டை கேட்டதும் கண்களில் நீர் வந்து விட்டது ' என்றார். நான் அதை கேட்டு சொல்ல முடியாத பூரிப்பை அடைந்தேன்.
அந்த பாடல் மிக பிரமாதமாக பாடப்படவில்லை. ஒழுங்கு மாறாமல் பாடப்பட்டது. அவ்வளவே.
கர்நாடக சங்கீதம் தெய்வீக ஒழுங்கு. பொய் இல்லாத எளிய வாழ்க்கை முறை உடைய எவரும் அந்த ஒழுங்கை உணர முடியும். அந்த அம்மாள் ஒவ்வொழுங்கை உணர்ந்ததற்குக் காரணம் அவருடைய இயல்பே.
டி எம் கிருஷ்ணா போன்றவர்கள் பாமரருக்கு சங்கீதம் என்று அரசியல் செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த நிகழ்வு நல்ல பாடம்.
நம்முடைய வாழ்க்கை முறை எண்ண ஓட்டம் சரியாக இருந்தால் உயர் விஷயங்கள் அனைவருக்கும் சொந்தமே. கர்நாடக சங்கீதம் பாமரருக்கும் போய் சேர வேண்டும் என்றால் தெய்வ பக்தி மேலோங்க வேண்டும். டி எம் கிருஷ்ணா போன்றவர்களால் அதற்கு எதுவும் செய்ய இயலாது.