நாம் நம்பிக்கையை வெளிப்புறத்தோற்றத்தோடு பெரும்பாலும் சம்பந்தப்படுத்திக்கொள்கிறோம். உதாரணமாக, தண்டம் வைத்துக்கொண்டு காவி உடுத்தி அமைதியாக இருந்தால் அவரை சன்யாசி என்று ஒப்புக்கொள்ளுகிறோம். அவர் மீதும் நமக்கு முழுமையாக நம்பிக்கை இல்லை. ப்ராஹ்மண சமூகம் மூன்று சங்கராச்சார்யர்களையும் தெய்வமாக வணங்கி, புகைப்படங்களை பூஜை அறையில் வைத்திருந்தாரகள். புது பெரியவா பற்றி அவதூறு பரப்பப்பட்டதும் அந்த புகைப்படம் அகற்றப்பட்டு நம்பிக்கையும் தொலைக்கப்பெற்றோம். இப்படி அரைகுறை மனிதர்களாகவே நாம் இருக்கிறோம்.
சமயபுரம் அம்மா அவர்களையும் ஒன்றுமே தெரியாமல் விமர்சிப்பவர்கள் ஆயிரம். மஹான் எந்த வேஷத்திலும் வரலாம். யாரை மேம்படுத்த வேண்டும் என்று சங்கல்பமோ அந்த வேஷத்தில் அவர்கள் இருப்பார்கள்.
நமக்கு பிடிக்காத புதிய சூழல் வழிபாட்டு முறை என்பதாலேயே முகம் சுளிக்கக்கூடாது. விமர்சிக்கும் மனோபாவம் அழிய வேண்டும். அறிவுக்கு வேலை கொடுத்தால் சரியான முடிவுக்கு வரலாம். நம்முடைய வாழ்க்கை மேம்படும்.
No comments:
Post a Comment