வாய்க்கு வந்ததை சொல்லி மக்களை ஏமாற்றி, குறை அறிவுடன் பிழைக்கும் ஜோதிடர்களிடம் இருந்து ஜோதிட சாஸ்திரத்தை மீட்டெடுக்க வந்த அவதார புருஷராகவே பூஜ்ய சுவாமி ஓம்கார் அவர்கள் இருக்கிறார்.
இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் இந்த சாஸ்திரத்தை பழகுவது, மிகவும் இனிமையான பயணமாகவே உள்ளது. ஜோதிடம் உடனடி பலன் தர வல்லது. (immediate gratification). ஒரு ஜாதகத்தை பார்த்து, நாம் கூறுவது சரியாக உள்ளது என்பதை கண்டுகொண்டால் அதீத உற்சாகமும், தவறாகக் கூறினால், எங்கே தவறு என்று ஆராய்ந்து கற்க ஏற்படும் உற்சாகமும் மிகவும் ஆனந்தமாகவும், புதிதாகவும் உள்ளது.
நமது தர்மத்தில் நாட்டம் உள்ள அனைவரும் கண்டிப்பாக ஜோதிட சாஸ்திரத்தை கற்க வேண்டும். நம்முடைய சொந்த வாழ்க்கைகைக்கு மட்டும் அல்ல, பலருக்கு வழிகாட்டவும் இந்த சாஸ்திரம் பயன் படும்.
அடிப்படை ஜோதிட வகுப்புகள் பூஜ்ய ஸ்வாமிஜியால் இலவசமாக பதிவேற்றப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் அவசியம் பயன் பெறவும்.
https://youtube.com/watch?v=kRwNORnP35g&si=8cmTtr3nCmSi1NR9