Thursday, 14 November 2024

பெண்ணின் பெருமை

 சக்தி அடா அவள் சக்தியடா 

உலகை உய்விக்க பிறந்தாளடா!

தாயாய் தாரமாய் தன்னை மாற்றி 

சேவை பயில வந்தாளாடா!

சுகஸ்வரூபினி அவளன்றோ 

கலைமகள் அவள் தாய் அன்றோ!

அனைவரையும் முன்னேற விட்டு 

அஸ்திவாரமாய் நிற்பாள் அடா!!

பெண்மையைக் கண்டால் கைக்கூப்பி 

புண்ணியம் நீயும் ஈட்டிடடா,

உய்ய இதைப் போல் நல்ல மார்க்கம் 

வேறு என்ன உரைப்பாரடா?

தியாகம் உடையவள் சக்தியடா,

தாய்மை உடையவள் சக்தியடா,

நீ வீரம் பயில வேறிடம் உண்டு அவளை என்றும் வணங்கிடடா!!




Monday, 4 November 2024

பர்த்தி அனுபவம்

 பிரசாந்தி நிலையத்தில் கிராமத்து முஸ்லிம்கள் அதிகம் வருவார்கள்.  குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்காக வருவார்கள்.  வழிபாட்டில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டார்கள்.   

ஆனால் என்னை நெகிழ்த்திய காட்சி ஒன்று.  வயதான துறவி ஒருவர். பிள்ளையாருக்கு வடல் போட வந்தார். அவரை  கைதாங்கலாக அழைத்து வந்தவர் ஒரு முஸ்லிம்.  துறவி வடல் போட்டுவிட்டு ஒரு பாதி தேங்காயை அவரிடம் தர, அதை பக்தியுடன் வாங்கிக்கொண்டார். பிறகு ' mere liye dua karo swami' என்று அவரிடம் வேண்டினார். துறவியோ 'இன்னும் முடியல வாசல் வரைக்கும் விட வேண்டும் என்னை' என்றார்.   அந்த துறவியின் அன்பான பேச்சால் அவரின் உயர்வை உணர்ந்து அவரை நமஸ்கரித்தேன்.

பர்த்தியை தவிர இது போன்ற காட்சிகள் சினிமாவில் தான் கிடைக்கும்.

வேற்று மதத்தை சார்ந்தவர்களுக்கும் பாரபட்சம் பாராமல் உதவுவது வெளியில் இருந்து பார்க்கும் போது ரசிக்கும் படியாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் மனமாற்றத்திற்கு உண்மையான அன்பு மட்டுமே காரணமாக இருக்க முடியும்.   

அத்வைதம் தவிர வேறு எந்த கோட்பாடும் இத்தகைய ஒற்றுமையை கொண்டு வர இயலாது.    இராமானுஜர் கூட, அனைவரையும் பெருமாள் பக்தராகும் படி கூறி ஹரிஜனங்களையும் தனதாக்கிக் கொண்டார்.    ஆனால் அத்வைதம் யார் எப்படி இருந்தாலும் அவர்களை பரப்ரம்ம ஸ்வரூபமாக பார்க்க வலியுறுத்திகிறது.

இதனால் தான் காந்தியை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.   அவர் ஹிந்துப் பெண்களைப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளச் சொன்னார் என்று குற்றம் சுமத்துகிறோம்.   ஆனால் எதிரே உள்ள கூட்டம் அரக்கர் கூட்டம். ஆபத்தில் இருப்பது அப்பாவிக் கூட்டம்.  தன் மானத்தை காக்க வேறு வழி என்ன இருக்க முடியும்?   முஸ்லிம்கள் ஹிந்துக்கள் என்று பாராமல் ஒரு மனிதனின் வளர்ச்சி நிலையை மட்டும் புரிந்து கொண்டு பரிந்துரைக்கப்படும் கசப்பு மருந்து.  

குருவின் காலடியில் இருந்து படிக்க  வேண்டிய பொக்கிஷம். என் அரைகுறை வார்த்தைகளுக்கு சக்தி கிடையாது.   🙏🙏

 

Love

 For many days, this emotion was puzzling me.   Is there anything apart from physical need in this? What craving in a human wants love from ...