விதவிதமாய் ஆக்கும் வேலை
இழிவை தரும் பெண்ணே
ஒருபடி முன்னேறி உடல் நலத்துக்கு
சமையல் பண்ணேன்!
எந்த செயலை செய்தாலும் அறிவு
நிக்கணும் முன்னே,
கண்டிப்போடு கட்டுப்பாடும்
இருந்தால் கௌரவம் கண்ணே!
சுகத்தை கொடுக்கும்
பொருளாய் உன்னை சுருக்க
வேண்டாம் பெண்ணே!
கற்பக விருக்ஷம் நீ இல்லை
அந்த கற்பகமே நீ தான் பெண்ணே!!
No comments:
Post a Comment