மருத்துவமனை கோயிலா?
சேவை செய்தால் புரியுமே!!
சேவை செய்ய நான் ஒருத்தி
என்று நானும் இருந்திட
ஓடி ஓடி சேவை செய்யும்
மருத்துவர்கள் பார்க்கிறேன்!!
ஏழை மக்கள் எளிய மக்கள்
சேவை ஏற்று இவர்களும்
மனிதம் பழகும் இடம் அன்றோ
என் தாய் கொடுத்த இடம் அன்றோ?
கோபம், அஹங்காரம், தொலைய
சேவை பழக வாருங்கள்!!
நம் தாய் கொடுத்த பள்ளிக்கூடம்
வந்து சற்று பாருங்கள்!!
No comments:
Post a Comment