எத்தனை முறை அடிபட்டால் என்ன,
புதிய பொருளிடம் மயங்குகிறோம்,
இனி ஒரு முறை நான் விழுவது இல்லை
என்றே மறுபடி பிறழுகிறோம்
குருவும் இறையும் மாறி மாறி நமக்காய் துடிக்கும் இணை அன்றோ
அவர்கள் சித்தம் ஒன்றே நம்மை மாற்றும் சக்தி உணர்கிறோம்.
காலம் மாறும் என்றே தாயும் உறுதி எனக்கு தருகின்றாள்
நல்ல பிள்ளை போலே நானும் நம்பித்தான் வாழ்கின்றேன்.
No comments:
Post a Comment