Friday, 14 February 2025

Love

 For many days, this emotion was puzzling me.   Is there anything apart from physical need in this? What craving in a human wants love from opposite sex? Can it be non physical also, like having a soul mate of same sex and sharing similar thoughts?

Any case, i concluded that love is nothing but guru sishya bhavam among couples.   One person aspires the qualities of other.  The other person sees him or her  completely open enough to grasp his or her ideas. That is, one looks for a perfect disciple while other looks for perfect guru.   

But unless guruthvam is maintained even after marriage, the charm and enthusiasm in marriage fails.   That is why, i consider the ideal marriage as one between a rishi and rishi pathni.

Here, though rishi pathni may be allowed to have worldly desires, rishi is completely absorbed in divine and never misuses his wife for mere desires.  The husband as a seeker always aspires wife to lead a dharmic life, thereby maintaining the newness in marriage.

Thus, for an aspiring soul, only highest can give happiness.   The wordly love experienced, is very short lived, unless both the couples are established in dharma.   If with dharma as guiding stick when a couple enter marital relationship, it will be a fulfilling life.   Not living for material comforts, but for duties.   Wife understands her duty to embrace husbands family, while husband appreciates her quality and respects her.   

Thus, while love is a charming world, unless we learn to give up and sacrifice , it is practically unattainable or unmaintainable.  But living for dharma is next best life, where both are equals. Shasthram ia the guru that guides both husband and wife and they both do their duty.

Dear friends, start the study of shasthram and have a fulfilled life.   Gurubhyo Namaha🙏🙏

Sunday, 9 February 2025

சர்வமும் நீயே

 எத்தனை முறை அடிபட்டால் என்ன,

புதிய பொருளிடம் மயங்குகிறோம்,

இனி ஒரு முறை நான் விழுவது இல்லை 

என்றே மறுபடி பிறழுகிறோம் 

குருவும் இறையும் மாறி மாறி நமக்காய் துடிக்கும் இணை அன்றோ 

அவர்கள் சித்தம் ஒன்றே நம்மை மாற்றும் சக்தி உணர்கிறோம்.

காலம் மாறும் என்றே தாயும் உறுதி எனக்கு தருகின்றாள் 

நல்ல பிள்ளை போலே நானும் நம்பித்தான் வாழ்கின்றேன்.



Thursday, 14 November 2024

பெண்ணின் பெருமை

 சக்தி அடா அவள் சக்தியடா 

உலகை உய்விக்க பிறந்தாளடா!

தாயாய் தாரமாய் தன்னை மாற்றி 

சேவை பயில வந்தாளாடா!

சுகஸ்வரூபினி அவளன்றோ 

கலைமகள் அவள் தாய் அன்றோ!

அனைவரையும் முன்னேற விட்டு 

அஸ்திவாரமாய் நிற்பாள் அடா!!

பெண்மையைக் கண்டால் கைக்கூப்பி 

புண்ணியம் நீயும் ஈட்டிடடா,

உய்ய இதைப் போல் நல்ல மார்க்கம் 

வேறு என்ன உரைப்பாரடா?

தியாகம் உடையவள் சக்தியடா,

தாய்மை உடையவள் சக்தியடா,

நீ வீரம் பயில வேறிடம் உண்டு அவளை என்றும் வணங்கிடடா!!




Monday, 4 November 2024

பர்த்தி அனுபவம்

 பிரசாந்தி நிலையத்தில் கிராமத்து முஸ்லிம்கள் அதிகம் வருவார்கள்.  குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்காக வருவார்கள்.  வழிபாட்டில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டார்கள்.   

ஆனால் என்னை நெகிழ்த்திய காட்சி ஒன்று.  வயதான துறவி ஒருவர். பிள்ளையாருக்கு வடல் போட வந்தார். அவரை  கைதாங்கலாக அழைத்து வந்தவர் ஒரு முஸ்லிம்.  துறவி வடல் போட்டுவிட்டு ஒரு பாதி தேங்காயை அவரிடம் தர, அதை பக்தியுடன் வாங்கிக்கொண்டார். பிறகு ' mere liye dua karo swami' என்று அவரிடம் வேண்டினார். துறவியோ 'இன்னும் முடியல வாசல் வரைக்கும் விட வேண்டும் என்னை' என்றார்.   அந்த துறவியின் அன்பான பேச்சால் அவரின் உயர்வை உணர்ந்து அவரை நமஸ்கரித்தேன்.

பர்த்தியை தவிர இது போன்ற காட்சிகள் சினிமாவில் தான் கிடைக்கும்.

வேற்று மதத்தை சார்ந்தவர்களுக்கும் பாரபட்சம் பாராமல் உதவுவது வெளியில் இருந்து பார்க்கும் போது ரசிக்கும் படியாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் மனமாற்றத்திற்கு உண்மையான அன்பு மட்டுமே காரணமாக இருக்க முடியும்.   

அத்வைதம் தவிர வேறு எந்த கோட்பாடும் இத்தகைய ஒற்றுமையை கொண்டு வர இயலாது.    இராமானுஜர் கூட, அனைவரையும் பெருமாள் பக்தராகும் படி கூறி ஹரிஜனங்களையும் தனதாக்கிக் கொண்டார்.    ஆனால் அத்வைதம் யார் எப்படி இருந்தாலும் அவர்களை பரப்ரம்ம ஸ்வரூபமாக பார்க்க வலியுறுத்திகிறது.

இதனால் தான் காந்தியை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.   அவர் ஹிந்துப் பெண்களைப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளச் சொன்னார் என்று குற்றம் சுமத்துகிறோம்.   ஆனால் எதிரே உள்ள கூட்டம் அரக்கர் கூட்டம். ஆபத்தில் இருப்பது அப்பாவிக் கூட்டம்.  தன் மானத்தை காக்க வேறு வழி என்ன இருக்க முடியும்?   முஸ்லிம்கள் ஹிந்துக்கள் என்று பாராமல் ஒரு மனிதனின் வளர்ச்சி நிலையை மட்டும் புரிந்து கொண்டு பரிந்துரைக்கப்படும் கசப்பு மருந்து.  

குருவின் காலடியில் இருந்து படிக்க  வேண்டிய பொக்கிஷம். என் அரைகுறை வார்த்தைகளுக்கு சக்தி கிடையாது.   🙏🙏

 

Sunday, 20 October 2024

Carnatic music and commoner

பொதுவாக நான் சொந்தக்கதை எழுத மாட்டேன். ஆனால் இன்று என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுகிறேன்.


ஒரு காலை பொழுதில் என் மகனை சங்கீத பயிற்சி செய்யுமாறு சொல்லிக்கொண்டிருந்தேன்.  அவனும் முன்பே பயிற்சி எடுத்திருந்த வர்ணம் ஒன்றை பாடினான்.    நான் திருப்தி அடைந்து அவனை பாராட்ட முற்படுகையில் வீட்டு வேலை பார்க்கும் அம்மாள் அங்கு வந்து 'பாட்டை கேட்டதும் கண்களில் நீர் வந்து விட்டது ' என்றார்.   நான் அதை கேட்டு சொல்ல முடியாத பூரிப்பை அடைந்தேன்.  

அந்த பாடல் மிக பிரமாதமாக பாடப்படவில்லை.  ஒழுங்கு மாறாமல் பாடப்பட்டது. அவ்வளவே.   

கர்நாடக சங்கீதம் தெய்வீக ஒழுங்கு. பொய் இல்லாத எளிய வாழ்க்கை முறை உடைய எவரும் அந்த ஒழுங்கை உணர முடியும்.   அந்த அம்மாள் ஒவ்வொழுங்கை உணர்ந்ததற்குக் காரணம் அவருடைய இயல்பே.

டி எம் கிருஷ்ணா போன்றவர்கள் பாமரருக்கு சங்கீதம் என்று அரசியல் செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த நிகழ்வு நல்ல பாடம்.   

நம்முடைய வாழ்க்கை முறை எண்ண ஓட்டம் சரியாக இருந்தால் உயர் விஷயங்கள் அனைவருக்கும் சொந்தமே.  கர்நாடக சங்கீதம் பாமரருக்கும் போய் சேர வேண்டும் என்றால் தெய்வ பக்தி மேலோங்க வேண்டும்.  டி எம் கிருஷ்ணா போன்றவர்களால் அதற்கு எதுவும் செய்ய இயலாது.



Tuesday, 25 June 2024

சாய்பாபா வழிபாடு

 இது எழுதி புரிய வைக்கக்கூடியதில்லை.  இணையதள சர்ச்சையினால் எழுத உந்தப்படுகிறது.   

அத்வைதத்தை பாமரனும் கடைபிடிக்க முடியுமா என்று கேட்டால், பிரசாந்தி நிலையமே அதன் பதில்.   அனைத்திலும் ஒன்றைப் பார்ப்பது, ஒன்றில் அனைத்தையும் பார்ப்பது, இவை பஜனைகள் மூலமாக வலியுறுத்தப்படுகிறது.  

பாபாவின் அனைத்து நிறுவனங்களிலும்  அனைவரும் பயனாளிகள்.  ஆஸ்ரமத்து பூஜைகளில், பெரும்பாலும் உள்ளூர் முஸ்லிம்கள் பங்கேற்பதில்லை.  ஆனால், குறைந்த விலைக்கு பொருட்களை வாங்குவதற்கோ மற்ற சலுகைகள் பெறுவதற்கோ அவர்கள் விலக்கப்படுவதில்லை.

பாபாவின் மருத்துவமனை பயனாளிகள் நிறைய பேர் முகமதியர்கள். (மருத்துவமனைக்கு இந்த பிரிவினர் தான் வர வேண்டும், ஏழைகள் தான் வரவேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை.)

பாபா 'miracle man' என்ற குற்றச்சாட்டு உண்டு. நம்பாதவர்கள் யாரையும், பாபாவின் பக்தர்கள் துளியும் மாற்ற முயற்சிப்பதில்லை.  உண்மையில் பக்தர்கள் பாபாவை விற்கமுயற்சிப்பது வெகுவாக discourage செய்யப்படுகிறது.  

பாபாவின் பணிகள் நம்மை வியப்பில் அழ்த்துகிறது.  கட்டணமில்லா பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தண்ணீர் தன்னிறைவு திட்டங்கள் என்று எவ்வளவோ.

இதில் ஆச்சர்யம் என்ன என்றால், பாபா சமாதி அடைந்து 13, 14 வருடங்கள் ஆன நிலையிலும், அவற்றின் தரம் சற்றும் குறையாமல் நடத்தப்படுகிறது.  ஒரு குரு தரமான சிஷ்யர்களை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட தரமான மக்களால் தான் அனைத்து நிறுவனங்களும் இன்றளவும் நடத்தப்படுகிறது.  

மருத்துவமனைகளிலும், ஆஸ்ரமத்திலும் பணிபுரியும் தன்னார்வதொண்டர்கள் ஏராளம்.  50%  மேல் தன்னைர்வதொண்டர்களே.  ஊழியர்கள் 50%. இன்றளவும் இது உண்மை.  ஸ்வாமியின்  சமாதிக்கு பிறகும் இது சாத்தியமாகின்றது என்றால் பெருமை விளங்க வேண்டும்.

கிறிஸ்துமஸ் அன்று சமாதியில் காரோல்ஸ் பாடுவது சகஜம்.  அதே போல் வெள்ளைக்கார மக்கள் சாய்ராம் சொல்லிக்கொண்டு பிள்ளையாருக்கு வடல் போடுவதும் சகஜம்.

அனைத்து மதத்தினரையும் ஒன்றாகப் பார்ப்பதால் நம்முடைய ஹிந்துத்துவத்திற்கு எந்த பங்கமும் வருவதில்லை.  சொல்லப்போனால் அருமையான ஹிந்துவாக மாற முடிகிறது.  பாபாவின் தொடர்பினால் ஹிந்துக்கள் 'practising Hindus' ஆக மாறுகிறார்கள் என்பது உண்மை.

சனாதன தர்மத்திற்காக போராடும் சாய் தீபக், ஸ்வாமியின் பக்தர்.

மழுங்கிய ஹிந்துக்கள் அல்ல பட்டை தீட்டப்பட்ட ஹிந்துக்கவே அத்வைதம் நம்மை மாற்றுகிறது. அத்வைதத்தை பாமரனுக்கும் ஊட்டியது சாய் அவதாரம். 

சாய்ராம்!!!





Saturday, 27 April 2024

How Advaitham enhances our life

 Advaitham will be sathyam at all time only for Gnanis and Jeevanmuktas. But we mortals can resolve many conflicts in life, if we have guru bhakthi and advaitha gnanam. 

Agnanam is the only cause of all our sins.  That is the same for whole humanity .  who ever commits any sin, upon you, or upon your religion or upon near and dear ones, it just makes us see the root cause, that is his ignorance . all colours like his religion, background etc will not affect our peace of mind.  

If we have the ability to remove his ignorance, we should. If he is incorrigible, we can pity him and move on.

Knowing advaitham also strenthens our faith on Hinduism.  Once we know that only our religion talks about the whole humanity as one, we know that solution to humanity is in Hinduism alone. Though the solution belongs to humanity, it is privided only by  Hinduism .  

Thus even the adharmis and anti hindu population should only look into Hinduism for his spiritual growth.  So my religion represents dharmam. Its growth depends upon dharmic people of the world. Even a dharmic Christian and dharmic muslim also contributes to the growth of Hindu religion.

Also, advaitham releases us from the narrowness of mind.  It allows us enjoy divinity in all forms of God and in all places of worship. 

I bow at the feet of my mother Shri Sathya Sai Baba and my Guru Poojya Shri Oomkarananda Saraswathi Maharaj for what they taught.

🙏🙏🙏🙏🙏🙏🙏





Wednesday, 17 April 2024

Seva at Sai Baba Hospital Bangalore.

மருத்துவமனை கோயிலா?

சேவை செய்தால் புரியுமே!!

சேவை செய்ய நான் ஒருத்தி 

என்று நானும் இருந்திட 

ஓடி ஓடி சேவை செய்யும் 

மருத்துவர்கள் பார்க்கிறேன்!!

ஏழை மக்கள் எளிய மக்கள் 

சேவை ஏற்று இவர்களும் 

மனிதம் பழகும் இடம் அன்றோ 

என் தாய் கொடுத்த இடம் அன்றோ?


கோபம், அஹங்காரம், தொலைய 

சேவை பழக வாருங்கள்!!

நம் தாய் கொடுத்த பள்ளிக்கூடம் 

வந்து சற்று பாருங்கள்!!





Wednesday, 27 March 2024

Soul talk

It is important  for brahmin community to maintain dharmic customs alive in day to day activities.  Anyone who claims to be devotee of Maha Periyava or associates himself to Kanchi mutt or Sringeri mutt, will be true to himself only if he keeps up this minimal duty.

There are lot of spiritual lifestyles open for a samskaaric brahmin, which also guarantees decent material perks also.

For example, one can choose to become a Sanskrit scholar or carnatic musician or bharatanatyamexponent or master Tamil books and Thevaaram.

These options allow us to stick to our roots. It gives us respect, remuneration and at the same time intention to practice detachment .

Though putting our ward in vedic patashala is the best option, it will be difficult for our materialistic mind to choose that immediately. These are via media professions which help us to carry on our values to next generation .

Even these options  are looked by us as very remote because, we have left all our customs and study only to earn money. We prioritise job and studies over aachaaram.

It is very very important that those forgotten dharmic duties are again practiced by men and women at home with bhakthi.

We have one Dushyanth Sridhar now, who braved to lose a corporate job for dharmic profession or practice. It could have been only possible because of the presence of brahminical aachaarams and following nithyakarmas by parents. 

Thus though we cannot dream anything different for our kids, giving a dharmic environment at home will allow kids to choose a different stream with confidence . 

Instead of fighting for our rights and worrying about fate of hindu dharma, if every brahmin chooses to do his sandhya vandhanam and follow other aacharams as shown by our elders, we will be giving a great gift to future generations and also to Hindu dharma. 

It is not too late my friends. Catch hold of dharma.  For great saints lived for that alone.

Jai Gurudev!!








Thursday, 21 March 2024

பெண்ணிற்கு

விதவிதமாய் ஆக்கும் வேலை

இழிவை தரும் பெண்ணே

ஒருபடி முன்னேறி உடல் நலத்துக்கு

சமையல் பண்ணேன்! 

எந்த செயலை செய்தாலும் அறிவு

நிக்கணும் முன்னே,

கண்டிப்போடு கட்டுப்பாடும்

இருந்தால் கௌரவம் கண்ணே!

சுகத்தை கொடுக்கும்

பொருளாய் உன்னை சுருக்க

வேண்டாம் பெண்ணே!

கற்பக விருக்ஷம் நீ இல்லை

அந்த கற்பகமே நீ தான் பெண்ணே!!




Love

 For many days, this emotion was puzzling me.   Is there anything apart from physical need in this? What craving in a human wants love from ...